மலர்க் குழு. தெல்லிப்பழை: சிவத்தமிழ்ச் செல்வி, பண்டிதை, துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாள் அறநிதியம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜனவரி 1990. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
vi, (4), 78 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 19.5×13.5 சமீ.
வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெண்புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணமாகும். இதில் அமைந்துள்ள ‘லலிதோபாக்கியானம்” ஏழு கண்டங்களை உடையது. ஏழாவது கண்டம் ஸ்தோத்திர வடிவில் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமமாக அமைகின்றது. இது அமைதிப் பிரார்த்தனைக்கும் கூட்டு வழிபாட்டுக்கும் உரியது. ‘நாம பாராயண பிரீதா” என்பது லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு நாமமாகும். அதாவது ‘நாமபாராயணத்தால் மகிழ்பவள்” என்பது பொருள் ஆகும். அன்னைக்கு அமைந்துள்ள கோடிக் கணக்கான நாமங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதே இதிலுள்ள ஆயிரம் நாமங்களாகும். இதனைத் தொகுத்துத் தந்தவர்கள் அன்னையின் அருள் பெற்ற வாக்தேவிகளாவர். இதுவே ‘லலிதா ஸஹஸ்ர நாமம்” என்று போற்றப்படுகின்றது. லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு ஸ்ரீ பாஸ்கரராஜர் வடமொழியில் சிறந்த உரை விளக்கம் தந்திருக்கிறார். இவ்வுரையை 1979இல் தமிழாக்கம் செய்தவர்கள் பத்மபூஷணம் என். இராமசாமி ஐயர் அறக்கட்டளை நிதியத்தினராவர். சிறந்த விரிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய இந்த உரை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தினரால் ஈழத்து வாசகரின் பயன்பாட்டுக்கென மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் 07.01.1990 அன்று தெல்லிப்பழையில் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10210).