J.S.K.A.A.H மௌலானா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 600 094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
112 பக்கம், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 18×12 சமீ.
அண்ணலார் நிகழ்த்திய அற்புதங்கள் அனைத்தும் இந்நூலில் அணி அணியாக சந்தக் கவிகளாக உலா வருகின்றன. தூய தமிழ் நடை, ஒரு வரிக்குள் பல்பொருள்களை அடக்கித்தரும் கவித் திறன், அறபு இலக்கியத்தில் அமைந்த அண்ணலார் புகழை செந்தமிழ்ச் சீர்களுக்குள் வடித்துவிட்ட வல்லமை-இவை அனைத்தையும் இக்கவிதைகளுக்குள் நாம் காண்கிறோம்.