16169 ஒளன் நாயகரின் அருள்மொழிக் கோவை (தமிழ்-ஆங்கிலம்).

J.S.K.A.A.H.  மௌலானா (மூலம்), எஸ்.காஜா நஜ்முத்தீன் (தொகுப்பாசிரியர்), எம்.ஐ.லியாகத் அலி (ஆங்கில மொழிபெயர்ப்பாளர்). திருச்சி 620 009: அவ்னிய்யா பிரிண்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் ட்ரஸ்ட், ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், மணப்பாறை ரோடு, 3வது பதிப்பு, 2015, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை, 2வது பதிப்பு, 1995. (திருச்சி 620 009: அவ்னிய்யா பிரிண்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் ட்ரஸ்ட், ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், மணப்பாறை ரோடு).

128 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4986-06-0.

மூல ஆசிரியர் அறிமுகம், பதிப்புரை, முன்னுரை, ஆங்கில மொழியாக்கம் எதற்காக?, பொன்மொழிகள், பேருரைகள் (1986, 1987, 1988), வானொலி உரைகள் (1976, 1978), ஐயமும் தெளிவும், சில அருஞ்சொற்கள் ஆகிய அம்சங்களுடன் இந்த அருள்மொழிக் கோவை வெளியிடப்பட்டுள்ளது. ஏகத்துவ ஞானத்தின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு முதற் பாடமாகவும், முதிர்ந்த தத்துவ ஞானிகளுக்கு உயர்நிலை போதமாகவும் இந்நூல் அமைகின்றது.   

ஏனைய பதிவுகள்

Large Bad Wolf Shrek Fandom

Content Pigs Go Wilds | durga online Realizing that the fresh star you are going to offer your his old existence again, Puss sets out