16170 கண்கவரும் சொர்க்கம்.

மௌலவி இஹ்ஸான் (ரஷாதி). கொழும்பு 12: தாருல் ஹம்தான், இல. 192/296, பண்டாரநாயக்க மாவத்தை, 3வது பதிப்பு, மார்ச் 2018, 1வது பதிப்பு, ஜீலை 2007, 2வது பதிப்பு, நவம்பர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1656-09-3.

சுவனத்தின் வர்ணனை, சுவன இன்பங்கள் ஆகிய இரு பிரிவுகளில் சொர்க்கம் தொடர்பான இஸ்லாமிய நம்பிக்கைகளை விளக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘இவ்வுலக வாழ்வின் இறுதி நோக்கம் சுவர்க்கத்தை அடைவதே. ஓர் உண்மை முஃமின் சுவனபதியை நோக்கமாகக் கொண்டே இறுதி மூச்சு வரை பாடுபடுவான். சுவர்க்கத்தில் தனது அனைத்துவிதமான ஆசைகளையும் பூர்த்திசெய்துகொள்ளலாம் என்ற உறுதியான நம்பிக்கையின் பேரில் உலகின் ஹறாமான அனைத்து சிற்றின்பங்களை விட்டும் தன்னைத் தடுத்துக் கொள்வான். சுவர்க்கத்தின் ஆவலிலே எல்லாவித நன்மைகளையும் செய்வான். இஸ்லாத்துக்காக, அனைத்துவிதமான சிரமங்களையும் சகித்துக்கொள்வான். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு வழிப்படுவதும், நம்பியவர்களின் வாழ்வைப் பின்பற்றுவதும் தான் இஸ்லாத்தின் உயிர்நாடி. அவ்வாறு வழிபட்டு நடப்பவன் தான் உண்மை முஸ்லீம். அந்த உண்மை முஸ்லீமுக்கு பிரதி கூலியாக வாக்களிக்கப்பட்ட இடம் தான் ‘சுவனம்”.

ஏனைய பதிவுகள்

Cent Harbors On the web

Content Exactly what Applications Shell out Your Real money Playing Video game? How to Winnings A lot more When To play Cent Slots The Better