16181 சமூகவியல்.

ஜெனிதா பிரதீபன். கல்முனை: றோயல் பப்ளிக்கேஷன்ஸ், பிரதான வீதி, சாய்ந்தமருது, 1வது பதிப்பு, 2016. (கல்முனை: றோயல் பிரின்டர்ஸ், பிரதான வீதி, சாய்ந்தமருது).

ix, 106 பக்கம், விலை: ரூபா 340., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-41847-0-1.

பெண்ணியம், சிறுவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள் என இன்னோரன்ன கருத்துக்களை உள்வாங்கி எழுதப்பட்ட சமூகவியல் கட்டுரைகளைக் கொண்டுள்ள நூல்.  மத்திய முகாம்-2ஐப் பிறப்பிடமாகவும், நற்பிட்டிமுனையை வாழ்விடமாகவும் கொண்ட இந்நூலாசிரியை கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையின் பழைய மாணவி. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விஷேட துறையில் முதல் தரத்தில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார். இத்தொகுப்பில் கார்ள்மார்க்ஸ், ஊடகங்களில் பெண்களின் பிரதிபலிப்பு, மரபுகளும் பால்நிலையும், பெண்கள் வீட்டின் கண்கள், சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமூக சமத்துவமின்மை-ஓர் சமூகவியல் நோக்கு, பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உரிமைகள், பெண்கள் அபிவிருத்தியின் ஒரு அங்கம், கல்விக்கான வழி திறக்கப்பட்டால் சிறுவர் உரிமைகள் தாமாகவே கிடைக்கப்பெறும், பால்நிலைப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும், தற்கொலை தரும் கவன ஈர்ப்பு, கொடிது கொடிது இளமையில் வறுமை, இலங்கையின் வேலையில்லாப் பிரச்சினைகள் பற்றிய சமூகவியல் பார்வை ஆகிய 13 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்