16183 சமூகக் கல்வியும் வரலாறும் : ஆண்டு 6.

பாடநூல் தயாரிப்புக் குழு. கிளிநொச்சி: சமூகக் கல்வி மன்றம்-வன்னி, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 20 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20.5 சமீ.

சிறிலங்கா அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் வரலாற்றுப்பாட நூல்கள் உண்மையான வரலாறாக அமையாமல் சிங்கள இனத்தை மேன்மைப்படுத்தக்கூடிய வகையில் மிகைப்படுத்தியும், தமிழ் மக்களின்; பெருமைகளை மறைத்தும் தமிழ்மக்களை இழிவுபடுத்தும் வகையிலே திரித்தும் எழுதப்பட்டுள்ளன. இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரிய நாடென்றும் அவர்களது வரலாறே ஈழத்து வரலாறென்றும் சிங்களவரால் சிங்களவருக்காகச் சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஆக்கங்களின் தமிழ்மொழிபெயர்ப்பே தமிழ் மாணவர்களுக்கு ஈழத்து வரலாறெனக் கற்பிக்கப்பட்டு வருகின்றது. சிறப்பும் மேன்மையும் மிக்க வரலாற்றைக் கொண்ட இனம் அந்த வரலாற்றால் பெருமையடைகின்றது. அத்தகைய வரலாறு அந்த இனத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகின்றது. பெருமைமிக்க பண்டைய வரலாற்றைக் கொண்ட ஈழத்தமிழினத்தின் இன்றைய மாணவர்கள் தமது வரலாற்றைக் கற்பதும் தெரிந்துகொள்வதும் அதனூடாக அவர்கள் வளர்ச்சியைப் பெறுவதும் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றது. தமிழ் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடியதாகவும் சமூக வாழ்வை நெறிப்படுத்தக் கூடியதாகவும் பொதுத் தேர்வுகளுக்கு ஊறு நேராத வகையிலும் 6, 7, 8 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ‘சமூகக் கல்வியும் வரலாறும்” என்ற பாடநூலினூடாகச் சில பாட அலகுகளைச் சமூகக் கல்வி மன்றம் ஆக்கித் தந்திருக்கிறது. ஆண்டு 6இற்குரிய இந்நூலில் தேசியப் பண், தேசியக் கொடி, தேசியக் கோட்குறி, தமிழீழ நாடும் விடுதலைப் போராட்டமும், இலங்கையின் முதற்குடிகள், எல்லாள மாமன்னன், இலங்கை தென்னிந்திய அரசியல் உறவு ஆகிய அத்தியாயங்களை இந்நூல் கொண்டிருக்கிறது.

ஏனைய பதிவுகள்