16187 மூன்றாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு : சிறப்பு மலர் 1985.

மலர் வெளியீட்டுக் குழு. தமிழ்நாடு: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், 1வது பதிப்பு, 1985. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(98) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22.5 சமீ.

உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டு இயக்கமான உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் 08.01.1974 இல் இதன் மூலவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்களின் முயற்சியில் ஐந்து நாட்டுப் பேராளர்களால் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக சாலை இளந்திரையன் முதலிரு ஆண்டுகளும், பின்னர் தொடர்ந்து இர.ந.வீரப்பனும் பணியாற்றினர். குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் இவ்வமைப்பின் செயலாளராகப் பணியாற்றி உலகத் தமிழர்களை ஒன்றுசேர்க்கும் பணியில் ஈடுபட்டார். அதன் பணிகளில் ஒன்றாக, தமிழகத்தின் சேலம் நகரில் 1985ஆம் ஆண்டு டிசம்பர் 13,14,15ஆம் திகதிகளில் மூன்றாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. இச்சிறப்பிதழில் மதுரை ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும் (மாநாட்டுப் பேராளர்-1981), 21ஆம் நூற்றாண்டில் தமிழர் (காசிதாசன்), நாடு ஒன்று ஆகவேண்டும் (ஐ.இளவழகு), மொறிஷியஸ் தமிழர் (தாசன் செட்டி), ஈழம் எரிகிறது (புதுவை இரத்தினதுரை), பர்மா முன்மாநிலத் தமிழர்கள் (டி.எஸ்.மணி), தமிழ்ப் பண்பாடு உலகளாவியது (நா.மகாலிங்கம்), சுமாத்திராவில் தமிழர் (சோலை-இருசன்), மர்த்தினிக் தமிழர் வேலையா பேசுகிறார், முதலாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தொடக்கவிழா (ஐ.இளவழகு, முரசு நெடுமாறன்), 2ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டு முடிவுகள், மதுரைத் தீர்மானங்கள், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், Procedural Regulations, Movement International de la culture Tamoule, Resolution of the International Movement for Tamil Culture, தமிழீழ விடுதலை ஏன்? (முகுந்தன்), ஈழத் தமிழரின் பொருளியல்: சமூகம்-இலக்கியம் பின்னணி (வே.இளங்கோ), புதுச்சேரிக் கிளையின் ஐந்தாம் ஆண்டு சாதனைகள் (வீ.மதுரகவி), பண்பாடு காக்கும் தமிழ் மகளிர் (பவானி மதுரகவி), மலேசியா வாழ் ஈழத் தமிழர்கள் (நா.வி.சிங்கம்), சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத் தோற்றம் (முல்லைவாணன்), உலகெங்கும் தமிழ் மணக்க (ச.மதனகல்யாணி) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

You bet Your life By Evelyn Cullet

Articles Tour of britain 2024 standings | You can Wager Your lifetime Which are the Recommendations To ensure An extended Lifetime of Aquatic Varnish? Web