சி.சந்திரசேகரம் (பிரதம ஆசிரியர்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம்;, 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, ஆனி 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 110 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 25.5×18.5 சமீ., ISSN: 2386-1630.
தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது எட்டாவது ஆண்டின் முதலாவது இதழில் (தை-ஆனி 2021), காரணியை நிகழ்த்துதல்: தொல்காப்பியரின் நிகழ்த்துகைக் கோட்பாடு (இ.முத்தையா), தமிழ்மொழிப் பாடத்துக்கான கலைத்திட்டம்: நிகழ்காலச் சவால்கள்-ஒரு நோக்கு (ஸ்ரீபிரசாந்தன்), பிரடரிக் ஜெமிசனின் பின்நவீனத்துவம் தொடர்பான விமர்சனம்: ஒரு மெய்யியல் பகுப்பாய்வு (இ.பிறேம்குமார்), தமிழின் சிறப்பெழுத்துக்கள்: ஒரு தெளிவாக்க முயற்சி (சி.சிவசேகரம்), ஊர்கள் உயிர்ப்படைய வழிசமைக்கும் தெருவெளி அரங்கு (க.சிதம்பரநாதன்), இலங்கையில் தமிழ், சிங்கள சமூகங்களின் அடையாள மீள்வடிவமைப்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரையும் அநாகரிக தர்மபாலவையும் முன்வைத்து (வடிவேல் இன்பமோகன்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாய்விதழின் ஆசிரியர் குழுவில் கலாநிதி க.இராஜேந்திரம், முனைவர் ந. முத்துமோகன் (தமிழ்நாடு), பேராசிரியர் கி. விசாகரூபன், பேராசிரியர் வ.மகேஸ்வரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.