16189 வடந்தை 2021.

சி.சிவலிங்கராஜா, என்.சண்முகலிங்கன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம் : பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

viii, 156 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ., ISBN: 978-624-5911-13-4.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பண்பாட்டு பெருவிழாவும் 2021 ஆம் ஆண்டிற்கான கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வும், கந்தபுராண படன ஒலிப்பேழை வெளியீடும் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் 18.12.2021 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வடமாகாணத்தில் கலைத்துறைக்கு சிறப்புத் தொண்டாற்றி தெரிவு செய்யப்பட்ட  மூத்த கலைஞர்களுக்கு ‘கலைக்குரிசில்” விருதும்,  இளம் கலைஞர்களுக்கு ‘இளம் கலைஞர்” விருதும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,  2020 இல் வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்பட்ட  நூல்களுக்கு ‘சிறந்த நூற்பரிசு” விருதும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். இம்மலரில் இலங்கையின் இசைவேளாளர்கள், இராவணீயம், மல்லிகைத்தீவுக் கிராமியப் பாடல்களில் மறந்தவையும் மறைந்தவையும், பண்பாட்டைச் சித்திரிக்கும் யாழ்ப்பாணத்துக் கிராமிய நடனங்கள், கிராமிய தெய்வ வழிபாட்டில் வைரவர் வழிபாடு, மரபுரிமைச் சின்னங்களைப் பேணிக்காத்தல் பெருங்கடன், புதுக்குடியிருப்புப் பண்பாட்டில் பாரம்பரிய பண்பாட்டுப் பொருட்கள், மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம், போதைப்பொருள் பாவனையும் பண்பாட்டு வீழ்ச்சியும், மின்சாரம் மற்றும் வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் வருகைக்குப் பின்னதான வடக்கு மாகாணத்தின் கலைகள், நிறத்தால் உடன்பாடு குணத்தால் முரண்பாடு, பண்பாட்டுக் கோலங்கள் ஆகிய கட்டுரைகளும், கலாசாரச் செயற்றிட்டம்-2021, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட நூல்கள் விபரம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட இறுவெட்டுக்கள் விபரம், பண்பாட்டு ஆலோசனைக் குழு, கலைக்குரிசில் விருது, இளங்கலைஞர் விருது, சிறந்த நூற் பரிசு, புகைப்படத் தொகுப்பு ஆகிய தலைப்புகளில் ஆவணப்பதிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்