சண்முகராஜா சிறிகாந்தன். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
ஒஎை, 239 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-5911-19-6.
இந்நூலில் ‘நூன்முகம்” (ஈழத்தமிழர் பண்பாட்டு ஆய்வுகள்-ச.சிறிகாந்தன்), ‘பண்பாட்டின் வரலாற்றுத் தொன்மை” (யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள்: ஈழநாட்டுத் தமிழ் சாசனங்கள்-கா.இந்திரபாலா, யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைத்த நாணயங்கள் -செ.கிருஷ்ணராஜா, பூநகரி பிராந்திய தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல்பொருட் சின்னங்கள்-ஒரு வரலாற்று ஆய்வு-ப.புஷ்பரட்ணம்), ‘சமூகக் கட்டமைப்பின் தனித்துவங்கள்” (தமிழ்ச் சைவப் பண்பாட்டிற் செல்வச் சந்நிதியின் முக்கியத்துவம்-கா.சிவத்தம்பி, யாழ்ப்பாணத்து கிணற்றுப் பண்பாடு-அ.சண்முகதாஸ், யாழ்ப்பாணத்து மரபுவழிப் பெண்கல்வி-சபா.ஜெயராசா, நமது பண்பாட்டில் தாய்மாமனின் வகிபாகம் அல்லது அம்மானும் மாமாவும்-எஸ்.சிவலிங்கராஜா, யாழ்ப்பாணத்தில் தமிழர் உணவுப் பழக்கவழக்கங்கள்-ச.மனோன்மணி), ‘சமய வாழ்வியல் கோலங்கள்” (ஈழத்துத் தமிழர் கிராமியத் தெய்வ வழிபாடு- க.கணபதிப்பிள்ளை, பண்டை ஈழத்து யக்ஷ நாக வழிபாடு-க.சிற்றம்பலம், யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழிபாடு-என்.சண்முகலிங்கன், வல்லியக்கனும் வல்லிபுரநாதரும்-பொ.இரகுபதி), ‘மொழி வழக்காறுகள்” (யாழ்ப்பாணத் பேச்சுத் தமிழில் ஆக்க பெயர்கள்-சு.சுசீந்திரராஜா), ‘மரபுசார் நம்பிக்கைப் பயில்வுகள்” (வடமராட்சி வடக்கு கடற்கரையோர மக்களிடையே நிலவும் பிறப்புச் சடங்குகள் (மு.அம்மன்கிளி), யாழ்ப்பாணத் தமிழரிடையே வழங்கும் சத்தியம் செய்தல் குறித்த நம்பிக்கை வழக்கங்கள்-கி.விசாகரூபன், யாழ்ப்பாணத்து அடிநிலைச் சாதிய உப பண்பாடாக பணச்சடங்கு -இ.இராஜேஸ்கண்ணன், யாழ்ப்பாணத்தின் மரணச் சடங்கில் பாடுதல் மரபும்இசையும்-தி.சதீஸ்குமார், கற்கோவள மீனவர்களின் தொழில்சார் நம்பிக்கைகள்-ச.சிறீகாந்தன்), ’வெளிப்பாட்டு பண்பாட்டு கலைகள்” (ஈழத்து நாட்டுக்கூத்து மரபு-சு.வித்தியானந்தன், யாழ்ப்பாணத்தில் மூவலகு வீடு-பா.அகிலன்) ஆகிய பிரிவுகளின் கீழ் இருபது தமிழர் பண்பாடுசார் கட்டுரைகள் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.