இலங்கை தேசிய சமாதானப் பேரவை. கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 291/50, ஹவ்லொக் கார்டன்ஸ், 1வது பதிப்பு, ஜனவரி 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
இக்கையேடு சமாதானப் பேரவையினால் ‘மார்க” (Marga) நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் மூலமான ஆரம்பக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். பரவலான ஆய்வின் அடிப்படையில் அமைந்த முழு விபரங்களுடனான அறிக்கையொன்று 1998இன் முதற் பகுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நூலின் புகைப்படங்கள் அநுருத்த லொக்குஹப்பு ஆரச்சி அவர்களினால் எடுக்கப்பட்டவையாகும். 1998 ஜனவரி 4ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் தேசிய பேராளர் மாநாட்டில் வெளியிடப்பட்டது. 1986-96 காலகட்டத்தின் போது அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் ஏற்பட்ட நேரடிச் செலவீனங்கள் 1996 விலைகளின் பிரகாரம் 228 பில்லியன் ரூபாவாகும். யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோர் ஒருவர் மீதொருவர் மரணத்தையும் அழிவையும் கொண்டுவருவதற்கான ஆற்றல்களை நிலைபெறச் செய்வதற்காக சகல இலங்கை மக்களும் தாங்கள் சுமக்கவேண்டிய கடன்சுமையை இது தெளிவாகக் காட்டுகின்றது.