16203 தனுஜா : ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்.

தனுஜா சிங்கம் (மூலம்), ஷோபாசக்தி (பதிப்பாசிரியர்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2020. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

352 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 330.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-943310-6-3.

ஈழத்தில் பிறந்த திருநங்கைகளிலே முதன்முதலாக தன் வரலாற்றை வெளிப்படையாக எழுதும் வாய்ப்பும் சூழலும் அமையப்பெற்றவர் தனுஜா. இந்நூலில் யுத்த காலம், ஆயிரம் மின்மினிகள், மாமதுரை போற்றுதும், அப்பாவின் வருகை, முதற் பலி, சிங்காரச் சென்னை, முதற்காதல், கொழும்பு, அம்மாவின் வருகை, பாலியல் வன்புணர்வு, யாழ்ப்பாணம், Willkommen, இணைய வலை, காட்டுவாசியும் ஹிப்ஹொப்பும், முப்பது மாத்திரைகள், பாலினத் தேடல், மாயப்பொறி, புதிய பாடசாலை, கார்ஸ்டனும் முராட்டும், கள்வனின் காதலி, ஹோர்மோன் மாயம், இரு சகோதரர்கள், திருநங்கைகள் சந்திப்பு, புதிய அம்மா, இணையச் சர்ச்சை, தேர்த்திருவிழா, ஹொலண்ட், தாலி பாக்கியம், முதலாவது கோப்பை, காதல் சமர், தட்டினேன் திறக்கப்பட்டது, புனித நிர்வாணம், காமினி சித்தி, மஞ்சள் நீராட்டு, ஓரிரவுக் காமம், ஓயாத போராட்டம், ஜீவன், சூரிச்சை நோக்கி, மோனாகுரு, தமிழ் டிஸ்கோ, என்னை அறிதல், நட்சத்திர நாயகிகள், தனிக்குடித்தனம், மரணவாசல், பட்டகால், ரபீக், யாழ் நங்கைகள், சினிமாக்காதலர், தாய்லாந்து, கனடா, நவரச நாயகன், கனவு மனிதன், பாரிஸ் நாட்கள், மாமியார் வீடு, துன்பத்துப் பால், கூறைச்சேலை, சட்டப்படியும் பெண், ஆதித்தொழில், ஐயர் என்ற சாவித்திரி, காணிவேல், நேர்முகத்தேர்வு, மறுபடியும் சுவிஸ், மகாராணி, அழுகளம், மீண்டும் தமிழகம், வழிகாட்டிகள், தாய்மண்ணில், மாதவம் ஆகிய 37 அத்தியாயங்களில் தனுஜாவின் தன்வரலாறு எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68884).

ஏனைய பதிவுகள்