16209 எதிர்ப்பரசியல்.

ரூபன் சிவராஜா. சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 24, Shop No B, S.G.P. Naidu Complex, தண்டீஸ்வரம் பஸ் தரிப்பு, பாரதியார் பூங்காவுக்கு எதிராக, வேளச்சேரி பிரதான சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2023. (சென்னை 600 042: யாவரும் பதிப்பகம்).

362 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா 450., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-92876-45-5.

1993இல் தனது 14ஆவது வயதில் நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர் ரூபன் சிவராஜா. கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள், நாடகம் மற்றும் ஊடகத் தளங்களில் இயங்கிவருபவர். அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக இயங்கிவருகின்றார். ‘எதிர்ப்பரசியல்” கட்டுரைத் தொகுதி இவரது நான்காவது நூலாகும். இவரது கட்டுரைகளில் தன்னை ஒரு பத்திரிகையாளராக நிலைநிறுத்தி உலக அரசியல் நிகழ்வுகளைத் தரவுகளால் அடுக்கி, சொல்லவேண்டிய கருத்துக்களை நேரடியாகவும் வலிந்து எதனையும் சேர்க்காமலும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவைக்கின்றார். உலகம்-ஐரோப்பா-அகதிகளின் கடல் வழிப் பயணம், விக்கிலீக்ஸ்-ஜ{லியன் அசாஞ்-அம்பலப்படுத்தல்கள், உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, கியூபா, பொருள்முதல்வாத உலகும் சூழலியற் பேரழிவும், சீனா, நோர்வே, கொரோனாப் பெருந்தொற்றும் பேரிடரும், மியான்மார், முகநூல் மற்றும் கூகிள், ஆப்கானிஸ்தான்-ஈரான்-சிரியா-துருக்கி-குர்திஸ்தான், பலஸ்தீனம், இலங்கைத்தீவு ஆகிய பிரிவுகளின் கீழ் தனது கட்டுரைகளை 13 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தித் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Troubled Home Slot Gratis Wmg

Articles Far more Video game Within this Collection Game play And you can Earnings An on-line Slot One to Haunts Your own Night The fresh