16211 நினைவுச் சாரலில் எட்வேர்ட் செய்த்.

சிராஜ் மஷ்ஹூர். அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, 5ஆவது ஒழுங்கை, அம்பகஹபுர).

58 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21×15., ISBN: 978-624-6047-04-7.

நினைவுச் சாரலில் பேராசிரியர் எட்வேர்ட் செய்த், இருளென்பது குறைந்த ஒளி, பல்கலைக்கழகச் சூழலின் போதாமைகள், இலங்கை: இது ஒரு பகைமறப்புக் காலம் (நேர்காணல்) ஆகிய மூன்று ஆக்கங்களின்; தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதிலுள்ள மூன்று கட்டுரைகளும் மூன்று விதமானவை. ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடர்பற்றவை. நான்காவதாக உள்ளநேர்காணல் முற்றிலும் வேறுபட்ட இன்னொரு வடிவம். சிராஜ் மஷ்ஹூரின்நான்காவது நூல் இது. எதிர்ப்பிலக்கியம் ஒரு கலாசார ஆயுதம் (ஆசிரியரின் கலைமாணிப் பட்ட ஆய்வு),  இலங்கை: இது பகை மறப்புக்காலம் (நேர்காணல்), பேரன்பின் ஈரமொழி (கவிதைத் தொகுதி) ஆகிய மூன்று நூல்களை முன்னதாக வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்