ந.புஸ்பராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 236 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-751-6.
மனித உரிமைகள் தொடர்பாகப் பரந்தளவான விடயங்களை தமிழ்மொழிமூல மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் எடுத்துரைக்கும் ஒரு வழிகாட்டியாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மனித உரிமைகள்: பொருள், இயல்பு, கோட்பாடுகள் மற்றும் வகைகள், மனித உரிமைகளின் வரலாற்று அபிவிருத்தி, சர்வதேச மனித உரிமை ஆவணங்கள், ஐ.நா.சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு பொறிமுறைகள் மற்றும் அமைப்புகள், ஐ.நா.வின் ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்புப் பொறிமுறைகள் மற்றும் அமைப்புகள், பிராந்திய மனித உரிமைகள் முறைமைகள், சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகிய ஏழு இயல்களில் இவை விளக்கப்பட்டுள்ளன. கலாநிதி ந.புஸ்பராசா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.