16216 கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுக்களுக்கான வழிகாட்டி : வடமாகாணம்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம். பத்தரமுல்ல: நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு. 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iii, 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-4033-00-9.

இக்கைந்நூலானது, தேசிய சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கிராமிய மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கான வழிகாட்டலை வடமாகாணத்தில் நடைமுறைப் படுத்துவதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தினூடாக வெளிவந்த வழிகாட்டி கோவையின் அடிப்படையில் மாகாண மட்டத்தில், நடத்தப்பட்டிருந்த பயிற்சிப் பட்டறை மூலமாக கலந்துரையாடப் பட்டிருந்த விடயங்களையும் அனுபவப் பகிர்வின் அடிப்படையிலும் War Child Holland நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி அனுசரணையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்