கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் கள வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).
xx, 232 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 17.5×12.5 சமீ.
நூலாசிரியர் தான் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த காலத்து அனுபவங்களைப் புதுமையான ஆக்க இலக்கியமாகத் தந்துள்ளார். பல்வேறு பாத்திரங்களைப் பேச வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியாவின் வரலாறு, அரசியல், நிர்வாகக் கட்டமைப்பு, பொருளாதாரம், கலாச்சாரம், வாழ்வியல் முதலான பல்வேறு அம்சங்களையும் அறியத்தந்துள்ளார். அவுஸ்திரேலிய தினம், ஒரு சீனியர் சிட்டிசனின் ஏக்கம், வெளிநாட்டு மாப்பிள்ளை, வேலை தேடும் படலம், பல்லுக்கு நேர்ந்த கதி, பதின்ம வயதின் பதற்றம், மலர் போன்ற ஆசிரியர், வாடகைக்கு ஒரு வீடு, மனக்காயம், நக்குத் தண்ணீர், வங்கியும் வட்டியும், குடைமரம், உள்ளே ஒரு வாதம், மனிதக் குட்டி, அனொறெக்சியா, பூசணிக்காய், செல்லுபடியற்ற வாக்கு, சமதளம், ரமிலன், புகை, கருக்கப்படுதல், ஊஞ்சல், நஞ்சூட்டல், மந்தி பிறந்தது முந்தி, வாழ்க்கையின் நடுக்கம், சமன் என்பது சமமின்மை, சொர்க்கத்தின் சக்தி, குடிபெயர முடியாத பறவை, தொலைந்தது எது?, நூறு டொலர் நாடகம், அழகுச் சிகிச்சை, இசைவாக்கம் ஆகிய 32 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.