ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை).
36 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-98297-2-5.
விதைப் பந்து என்பது களிமண் மற்றும் மக்கிய உரம் அல்லது பசுஞ்சாணம் போன்றவற்றில் விதைகளை வைத்து உருண்டை வடிவில் செய்யப்படுகிறது. விதை பந்துகள், பூமி பந்துகள், விதைக் குண்டுகள் என்றும் அழைக்கப்படும், களிமண் பந்து ஆகும். இந்த விதைப்பந்துக் கலவையில் பல்வேறு சேர்க்கைகள் மட்கிய மண் அல்லது உரம் போன்றன சேர்க்கப்படலாம். இவை விதைக்கு நுண்ணுயிர் எதிர்ப்பொருட்களை வழங்கிறது. இப்பந்து மையத்தில் உள்ள விதையை சுற்றி வைக்கப்படுகின்றன. இந்த பந்தை பலப்படுத்த பருத்தி நார்களை அல்லது கூழாக்கப்பட்ட தாள் சில நேரங்களில் களிமண்ணில் கலக்கப்படுகிறது. களிமண் பந்தைப் பாதுகாக்க, விதைப்பந்தின் வெளிபுறத்தில் காகித கூழால் ஆன உரை மேற்பூசப்படுகிறது. இது கடுமையான வாழ்விடங்களில் விதையைப் பாதுகாக்கிறது. இச்சிறுநூல் விதைப்பந்து பற்றிய விளக்கத்தை வாசகர்களுக்கும், சூழலியலாளர்களுக்கும் வழங்குகின்றது.