செ.கணேசலிங்கன். சென்னை 600001: பரதன்; பதிப்பகம், 63, தையப்பன் தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 1985. (சென்னை 17: அகத்தியர் அச்சுக்கூடம்).
(5), 6-77 பக்கம், விலை: இந்திய ரூபா 5.50, அளவு: 18×12.5 சமீ.
இன்று நாம் வர்க்க சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வர்க்க சமுதாயம் மக்களைப் பல்வேறு பெரிய குழுக்களாகப் பிரித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களைக் கொண்டவர் பல தரம். இரு கரங்களை மட்டும் கொண்டு உழைப்பவர் பலதரம். இச்சிறு நூல் இத்தகையவர்களை விஞ்ஞான அடிப்படையில் சமூக வர்க்கங்களாகத் தரம் பிரித்துப் பார்க்கின்றது. சமூக வர்க்கங்களை (Social Class) எவ்வாறு பகுப்பது என்பதைப் பள்ளிகளில், கல்லூரிகளில் தானும் கற்பிப்பதில்லை. சமூக வர்க்கங்கள் பற்றித் தமிழில் வெளிவரும் முதலாவது நூல் இதுவெனக் கருதப்படுகின்றது. பல்வேறு சமூக வர்க்கங்கள், அவற்றின் புரட்சிகர, எதிர்ப் புரட்சிகர குணாம்சங்களையும் இந்நூல் ஆராய்கின்றது. எளிதில் இவற்றைக் கற்கக்கூடியவாறு சிறு சிறு கடிதமுறையில் எழுதப்பட்டுள்ளது. இதில் சமூக வர்க்கங்கள், நவ காலனித்துவம் பற்றிய சில குறிப்புரைகள் என்ற முன்னுரையை அடுத்து, வகுப்பும் வர்க்கமும், பாட்டாளிகள், கூலி விவசாயி, ஏழை விவசாயி, நடுத்தர விவசாயி, பணக்கார விவசாயி, நிலப்பிரபுக்கள், பாட்டாளிகள், தேசிய முதலாளிகள், தரகு முதலாளிகள், சிறுபண்ட உற்பத்தியாளர், வேலையற்றவர்கள், மாணவர்கள், உதிரிப் பாட்டாளிகள், அறிவு ஜீவிகள், காலனி-அரைக்காலனி-நவகாலனி, புதிய ஜனநாயகப் புரட்சிஆகிய 17 பிரிவுகளில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9398).