செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, மே 2014. (சென்னை: சிவம்ஸ்).
48 பக்கம், விலை: இந்திய ரூபா 30.00, அளவு: 22.5×15 சமீ.
மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கை, உலக வரலாற்றில் அரசியல், பொருளாதார, புதிய பண்பாட்டுக்குத் தூண்டிய நூல். கட்சி அறிக்கையாக 23 பக்கங்களில் 1848இல் ஜெர்மன் மொழியில் இது வெளிவந்தது. உலகைக் குலுக்கிய மானிட விடுதலை வரலாற்றையும் கூறும் புரட்சிகரமான படைப்பு. 1888இல் அன்றைய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அது இன்றைய தமிழில் இங்கு எளிமையான வகையில் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளது. இன்றுவரையான வரலாறு யாவும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என அறிக்கை ஆரம்பிக்கும். அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்ற அறைகூவலுடன் அறிக்கை நிறைவுபெறும். நீங்கள் இழப்பதற்கு அடிமை விலங்கு தவிர ஒன்றும் இல்லை. வெல்வதற்கு ஓர் உலகம் உள்ளது என்று அறிவுறுத்தும். உலகக்கு விளக்கம் கூறுவதல்ல, உலகை மாற்றியமைக்க வழிகாட்டும் ஆவணம்.