16231 கடல் அட்டை வளர்ப்பும் யாழ்ப்பாண தீவக கடல்களின் அரசியலும் சூழலியலும்.

1ஏ.எம். றியாஸ் அகமட். நோர்வே: உயிர்மெய் பதிப்பகம், Kaptein Linkesvei 9A, 6006 Aalesund 1வது பதிப்பு, 2022. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

xii, 70 பக்கம், விலை: ரூபா 560., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-98297-7.0.

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞானக் கற்கைகள் சிரேஷ்ட விரிவுரையாளரான அம்ரிதா ஏயெம் என அறியப்பட்ட ஏ.எம். றியாஸ் அகமட் ஒரு சூழலியல் அறிஞராகவும் செயற்பாட்டாளராகவும் இனம்காணப்பட்டவர். யாழ்ப்பாணத் தீவகப் பிரதேசத்துக்கு கள ஆய்வு நோக்கில் பயணம் செய்து தீவகம் தொடர்பாகவும், அங்கு அமைக்கப்படும் கடலட்டைப் பண்ணைகளின் அரசியல் தொடர்பாகவும் இந்நூலை எழுதியுள்ளார். மெலிஞ்சிமுனை நோக்கிய பயணம், உள்ளூர் அறிவு, இலங்கை மீன்பிடிக் கைத்தொழிலும் வளங்களும், நீருயிரின வளர்ப்பு, சூழற் தாக்க மதிப்பீடுகள், ஆரம்ப சுற்றாடற் பரிசீலனையும் டீ-வகைத் திட்டங்களும், நரையான்பிட்டி-வண்ணமயமான வலசைப் பறவைகளின் தேசம், கண்ணாத் தீவு-உயிரினப் பல்வகைமையின் உறைவிடமும் உயிர் வளர்க்கும் தொட்டியும், உயிரினப் பல்வகைமை-1, தீவுகளின் உயிரினப் பல்வகைமை, கடலட்டை (Sea Cucumber), பால் அல்லது ராஜ அட்டை (Sandfish), கடலட்டை (பால் அட்டை) வளர்ப்பு,  கடலட்டை பண்ணைகளுக்கான மீனவர்களின் எதிர்ப்பு-1, கடலட்டை பண்ணைகளுக்கான மீனவர்களின் எதிர்ப்பு-2, மற்றைய நாடுகளில் கடலட்டை பண்ணைகளால் மீனவ சமூகங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், தீவக கடல்களில் கடல் அட்டை வளர்ப்பின் அரசியல், பூகோள முக்கியத்துவம் ஆகிய 17 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Lucky Treasure Casino Mot

Ravi Roi Ali Casino Retraite Nos Économies Associés Í  ce genre de Gratification Comme Octroyer Un Salle de jeu Un tantinet Fiable ? Originellement, de bien