16233 உலகமயமாதல் : சில அவதானிப்புகள்.

தி.உதயசூரியன். வவுனியா: கல்வி மற்றும் அறிவாராய்ச்சியியல்செயலாடல்களுக்கான மேகலா நிலையம், 51ஃ5, கூமாங்குளம், 1வது பதிப்பு, மே 2014. (யாழ்ப்பாணம்: ஈஸ்வா எண்ணிம அச்சகம், திருநெல்வேலி).

67 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-98302-6-9.

பொது வாசகனின் அறிவுத் தேவையைக் கருத்திற்கொண்டு ஆசிரியரின் பன்முகப் பார்வை சமூகவியல், அரசியல், உளவியல், பண்பாட்டியல் போன்ற பல்வேறு கோணங்களில் அணுகுகின்றது. பொதுமக்களின் அறிகைப் புலத்தில் உலகமயமாதல் பற்றியதோர் அருட்டுணர்வினை ஏற்படுத்தும் பாங்கினை இந்நூல் கொண்டுள்ளது. உலகமயமாதல், உலகமயமாக்கல், நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற சொல்லாடல்களுக்கான விளக்கங்களும், விபரிப்புகளும், அவரவர் சார்ந்த சித்தாந்தப் பின்னணிகளோடு வெளியிடப்பட்டு வருகின்ற ஓர் நிலையில் இவற்றிலிருந்து சற்றே வேறுபட்ட வகையில் இவை பற்றிய விளக்கங்களை மனிதத்துவ நோக்கில் இலகுவாகத் தர இந்நூல் முயல்கின்றது. இந்நூலில் நான்கு அறிவியல் சார்ந்த கட்டுரைகளும் மற்றும் சான்றோர் பலர் பற்றிய விபரங்களும் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58086).

ஏனைய பதிவுகள்