16236 இலங்கை அரசியல் திட்ட வரலாறு.

கருப்பையா பிரபாகரன். கண்டி: ஈஸ்வரன் புத்தகாலயம், 126/1, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 2013. (கண்டி: குறிஞ்சி பதிப்பகம், 280 A, நேத்ரா ஓப்செட் பிரின்டர்ஸ், டீ.எஸ். சேனநாயக்க வீதி).

xii, 308 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-0660-08-7. ரூபா 600.

தேசியவாதம், சுதந்திரத்திற்கு முன்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றுப் பின்னணி, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாறு, இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்பு, பிரதிநிதித்துவ முறைகள், அரசியல் அமைப்பின் 17ஆம் சீர்திருத்தம், அரசியல் அமைப்பின் 18ஆம் சீர்திருத்தம், இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை, பின்னிணைப்பு: குறு வினா-விடைகள் 300 ஆகிய தலைப்புகளின் கீழ் இலங்கையின் அரசியல் திட்ட வரலாறு  இந்நூலில் விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரிய பயிற்சியை மேற்கொண்ட திரு. க.பிரபாகரன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டத்தினையும் அரசறிவியல் துறையில் முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். 2005ஆம் ஆண்டில் நல்லாசிரியருக்கான ஜனாதிபதி விருதினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61321).

ஏனைய பதிவுகள்