16237 எண்ணம் போல் வாழ்க்கை : மனிதத்துடன் சமூகத்துக்கான ஒரு பயணம்.

நிவேதா சிவராஜா. யாழ்ப்பாணம்: மனிதம் வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).

xv, 106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-98018-0-6.

மனிதம் அமைப்பானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 2016இல் உருவாக்கப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு. கல்வி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தொழில் வழிகாட்டல் மற்றும் பெண்கள் நலன் ஆகிய துறைகளில் சமூக உணர்வுடன் மனிதம் பயணித்து வருகின்றது. தமது சமூக மாற்றத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மனித மணித்தியாலங்களை முதலீடாக்கிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு இளம் சமூக செயற்பாட்டாளர்களின் களப் பயணத்தின் அழகிய தருணங்களும் பொக்கிஷமானவை. அப்படியாக மனிதத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்த இந்நூலாசிரியர் சமூக செயற்பாடுகளின்போது தான் சந்தித்த சவால்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் இந்நூலில் தொகுத்தளித்துள்ளார். மனிதத்தில் ஒருத்தியாய் என்னுடைய முதல் நாள், காட்டுப்புலத்தில் மனிதம், காட்டுப் புலத்தில் தொடர்ந்தும் மனிதம், தொடர்ச்சியான கண்காணிப்பு, காட்டுப்புலத்தில் ஒரு நூலகம், மனிதமும் பல்கலைக்கழக நாட்களும், மனிதத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்தநாள், மழலைகளுடன் எனது 24ஆவது பிறந்தநாள், சிறுவர்களாகவே மாறிய சிறுவர்தினக் கொண்டாட்டம், மாற்றுத் திறனாளிகளுடன் மனநிறைவான பொழுதுகள், யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவும் மனிதமும், பரீட்சை நாட்களும் மனிதத்தின் நிதி சேகரிப்பும், கொரோனாவால் கலைந்துபோன நிதி சேகரிப்பு, யாழின் வெள்ளமும் மனிதத்தின் இடர்கால பணிகளும், வெள்ள இடர் காலத்தில் நிதி சேகரிப்பும் கள நடவடிக்கையும், இணையம் வாயிலாகவும் இயங்கிய மனிதத்தின் நாட்கள் ஆகிய 16 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்