பி.மாணிக்கவாசகம். வவுனியா: தனேத்ரா வெளியீட்டகம், 7/3, 10ஆவது ஒழுங்கை, வைரவ புளியங்குளம், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோவில் வீதி).
xxii, 536 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-98500-0-2.
ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கட்டுரைகள் இவை. மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்றத்தை மட்டுமே வேண்டுவது இக்கட்டுரைகளின் நோக்கமல்ல. நீதி தேடும் ஒரு சமூகத்தின் வாழ்வியல் சூழலையும் சமூக நிலைப்பாடுகளையும் உளவியல்ரீதியாக சமூக அறிவியல் ஆய்வு நோக்குடன் இவை எழுதப்பட்டுள்ளன. வாழ்க்கையை என்னவென்று சொல்வது, இயலாமைக்குள்ளே இயலுமை, இயல்பூக்கம் நிறைந்த சூழமைவு தேவை, முடிந்தும் முடியாத போராட்டம், உறுதிப்படுத்த வேண்டிய விசேட உரிமைகள், குடும்பச் சுமை உள்ளவர்கள் சிகிச்சைபெறச் செல்வதில்லை, ஒரு பிடி தசைய அள்ளிக்கொண்டு போனது, நினைத்துக்கூட பார்க்க முடியாத திருமண பந்தம், வைகறையின் வாழ்வியல் உதவி, ஆவணத் திரட்டலின் அவசியம், சய வலிமையும் இல்லை சுமைதாங்கியும் இல்லை, கலகலப்பாகப் பழகி சிரித்துப் பேசினால் காயம் ஆறுமோ?, திறமைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், நம்பிக்கை அளித்த நவம் அறிவுக்கூடம், கையேந்தும் நிலையை மாற்ற வேண்டும், மாற்றுத் திறனாளி சிறுவர்களின் மனத்துயரங்கள் நீங்குமா?, வெள்ளைக்கொடி ஏந்திய ஒரு பயணம், யாரைப் பிடித்து புத்தகங்களை வாசிக்கச்சொல்லி பதிவுசெய்வது?, எல்லையற்ற திறமைகள் ஒளிவீச வேண்டும், உரிமைகளுக்காக தகுதிக்கு மீறி போராட வேண்டியுள்ளது, திறமை இருந்தும் தொழில் வாய்ப்பின்றி வாடும் நிலை, கண்ணும் கைகளும் இயலாத போதும் கலைப்பீடம் தெரிவான விஜயலட்சுமி, யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் விடுதியே மாற்றுத்திறனாளிகளின் வீடு, கண்கள் பாதிக்கப்பட்டன கைகளையும் இழந்தேன், ‘நாக்கால நம்பர அடையாளப்படுத்தி பல்லால டயல் செய்வேன்”, அந்தப் பிள்ளை இரவு முழுவதும் கதறிக்கொண்டே இருந்தது, தொடர்ச்சியான கவனிப்பும் அரவணைப்பும் அவசியம், வென்றவர் தோற்றவர் என்ற அணுகுமுறை மாறவேண்டும், அரசும் சமூகமும் ஊக்குவிக்க வேண்டும், விசேட சட்டங்கள் அவசியம், அக்கறை கொள்ளாத அரசியல்வாதிகள், அடிப்படை உரிமை, உயர்கல்வி வசதிகள் செய்யப்பட வேண்டும், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முன்பள்ளிகள், சைகை மொழியின் தேவை, ‘புகை மண்டலம் சூழ்ந்தது கீழே விழுந்து மூச்சுத் திணறி மயங்கினேன்”, கல்வி ஊக்குவிப்பு உதவிகளைப் பெற முடியாதுள்ளது, அணுகுமுறைகள் அந்நியப்படுத்துகின்றன, கை இல்லாதவர்களைக் கல்யாணம் முடிக்க யார் முன்வருவார்கள்?, என்னை நம்பி ஒரு வேலை தர ஒருத்தரும் இல்லையே, கைகள் இல்லாமல் போனதும் செத்துப் போனதாகவே நினைத்தேன், தலவரைப் பற்றி என்ன நினைக்கிறோம் என அறியப் பார்த்தார்கள், அன்பும் அரவணைப்பும் அவசியம், பிச்சை எடுக்கும் நிலை உருவாகிவிடக் கூடாது, நவம் அறிவுக் கூடத்தைச் செயற்படுத்த வேண்டும், இதமான உளவியல் சூழல் அவசியம், மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கு நிறுவன ரீதியான செயற்பாடு தேவை, எருமை சோளம் தின்னும் காட்சி, பொருத்தமற்ற சக்கர நாற்காலி பாதிப்பை ஏற்படுத்தும், மூளை முடக்குவாதத்தினால் சக்கர நாற்காலியில் தஞ்சம், சிறுவர்களுக்குப் படுக்கைப் புண் வராமல் தடுக்க முடியுமா?, தாம்பத்திய வாழ்க்கை சாத்திமா?, விசேட தகைமைகளும் பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு அவசியம், மனிக்பாம் அகதி முகாமில் விசேட தேவையுடையோருக்கும் வகுப்புகள், பிரதேசரீதியில் பிள்ளைகளின் முரண்பாடான நிலைமைகள், விசேட தேவைக்குரிய மாணவர்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டிருப்பர், வடக்கில் 45 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், அங்கக் குறைபாடு ஆற்றல் குறைபாடல்ல ஆகிய 58 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.