பாலசுப்பிரமணியம் தனபாலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 208 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-606-9.
அறிமுகம்/ மாணவர் மையக் கல்வியில் பல்மட்டக் கற்பித்தல், பரிகாரக் கற்பித்தல், செயல்நிலை ஆய்வு/ மத்திய மாகாணத்தில் பல்மட்டக் கற்பித்தல் கற்றல் செயன்முறை/ ஆரம்பக் கல்வி வகுப்பறையில் பரிகாரக் கல்விப் பிரயோகங்கள்/ பரிகாரக் கற்பித்தலில் தமிழ்மொழி இடர்ப்பாடுகளை இனங்காணல்/ பிரதிபலிப்பும் செயல்நிலை ஆய்வும்ஃ ஆசிரிய வாண்மையை உயர்த்தி மாணவர் கற்றல் இடர்ப்பாடுகளை நீக்க உதவும் செயல்நிலை ஆய்வுகள்/ ‘கொண்டுசெல்லலுடன் ஈரிலக்க, மூவிலக்க எண்களின் கூட்டல் திறனைப் பெறுவோம்” இலங்கைப் பாடசாலை ஒன்றில் தரம் 03 வகுப்பறையில் கணித பாடத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்நிலை ஆய்வு அறிக்கை/ யாழ்ப்பாண மாவட்ட ஆரம்பக் கல்விப் பாடசாலைகளில் 2003ஆம் ஆண்டிலிருந்து சிறுவர் நட்புறவுப் பாடசாலைச் செயற்றிட்டத்தை அமுலாக்கலும் அது தொடர்பான பிரச்சினைகளும்/ யாழ்ப்பாண மாவட்ட ஆரம்பப் பாடசாலைகளில் 2003ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்களை அமுலாக்குகையில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் ஆகிய 10 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பா.தனபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றவர். ஆலோசனை வழிகாட்டல் பாடத்தைக் கல்விமாணி, கல்வி முதுமாணி கற்கும் மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன் இத்துறைசார் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் வாண்மையாளர்களுக்கு மேற்பார்வையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.