16244 உயர்கல்விச் சிந்தனையை வெகுஜனமயமாக்கல்.

சோ.சந்திரசேகரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, > U.G.50, People’s Park,  2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

vi, 102 பக்கம், விலை: ரூபா 340., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-685-025-3.

சோமசுந்தரம் சந்திரசேகரம் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து, பின்னர் கல்விப்புல விரிவுரையாளராகவும், கல்வியியல் பேராசிரியராகவும் உயர்ந்து கல்விப்பீடப் பீடாதிபதியாகவும் தனது பணிகளை விரிவாக்கிக்கொண்டவர். இந்நூலில் இவர்  இலங்கையில் உயர் கல்வியில் புதிய போக்குகள், இலங்கையின் உயர் கல்வியின் எதிர்காலம், இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வி: சில புதிய போக்கு, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள், உயர்கல்வியின் உலகமயமாக்கம், தனியார் உயர்கல்வி உலகளாவிய செல்நெறிகள், உயர்கல்வியின் வெகுசனமயமாக்கம், சீனப்பல்கலைக்கழகங்கள் நாடும் வெளிநாட்டுப் பேராசிரியர்கள், உலகளாவியரீதியில் பல்கலைக்கழக அசிரியர் பெறும் சம்பளங்கள், புதிய தென்னாசிய பல்கலைக்கழகம், உலகளாவிய பல்கலைக்கழகங்களை வரிசைப்படுத்தும் செயற்பாடு, மெய்நிகர் பல்கலைக்கழகம், உலகின் அதிசிறந்த பல்கலைக்கழகங்கள், மேற்கு நாடுகளில் மாறிவரும் பாடசாலைகள், சர்வதேச கல்விச் செல்நெறிகள் ஆகிய தலைப்புகளில் எழுதிய 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27247).

ஏனைய பதிவுகள்