இ.இராஜேஸ்கண்ணன். யாழ்ப்பாணம் : ஆறுதல் நிறுவனம், 51, வைமன் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, புரட்டாதி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xii, 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-98325-0-3.
சமூக இடைவெளி மற்றும் எண்ணிம இடைவெளி ஆகிய இரண்டும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை எவ்வாறு உருவாக்கியுள்ளன என்ற கருப்பொருளை சமூகவியல் நோக்கில் இந்நூல் ஆராய்கின்றது. சமூக இடைவெளி சக எண்ணிம இடைவெளி சமன் கல்வியில் ஏற்றத்தாழ்வு, கோவிட் -19 பேரிடரும் பிள்ளைகளின் சமூகமயமாக்கலிலான தேக்கநிலையும்: மாற்றுகளைத் தேடுதல் குறித்த கருத்தாடலுக்கான அவசியம், கோவிட் -19 பேரிடர் காலத்து இளைஞர்கள்: கரிசனை கொள்ளவேண்டிய பாதிப்புகளும் பரிகாரங்களும், நிலைமாறும் கல்வி ஒழுங்கில் பரீட்சை மையக் கல்வி: அசாத்தியங்களைக் களைவித்தலும் சாத்தியங்களை விளைவித்தலும், செயலிகள், சாதனங்களை மையப்படுத்திய பேரிடர்கால உயர்கல்வி: கல்வியில் சுயசிந்தனையை காவுகொள்ளும் புதிய ஆதிக்கவாத பொறிமுறை ஆகிய ஐந்து இயல்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் சமூகவியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார்.