16248 பட்டதாரி ஆசிரியர் மற்றும் கல்வித்துறை சார் போட்டிப் பரீட்சைகளுக்கான வழிகாட்டி நூல்.

P.உமாசங்கர். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜனவரி 2023. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

iv, 242 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

இலங்கையில் கல்வித்துறைசார் போட்டிப் பரீட்சைகளுக்கென வெளியிடப்படும் தமிழ்மொழிமூல நூல் இதுவாகும். ‘கல்வி பொது அறிவு” என்ற பிரிவின்கீழ் 28 தலைப்புகளின் கீழ் முழுமையான கல்விசார் தொது அறிவு விடயங்கள் தரப்பட்டுள்ளன. 5 பொது அறிவு மாதிரி வினாத்தாள்கள் விடையுடன் உள்ளடக்கப்பட்டுள்ளன. ‘நுண்ணறிவும் உளச்சார்பும்” என்ற பிரிவில் 60 தலைப்புகளில் நுண்ணறிவு உளச்சார்பின் அறிமுக விளக்கம் மற்றும் 10 நுண்ணறிவு உளச்சார்பு மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70221).

ஏனைய பதிவுகள்

15964 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கும் ஏனைய உயர்தரப் பரீட்சைகளுக்குமான இலங்கை வரலாறு (முதலாம் பாகம்) அநுராதபுரக் காலம்.

 எழுத்தாளர் குழு. கல்வி வெளியீட்டுத்திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2013. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 304 பக்கம், விலை: ரூபா 427., அளவு: 21×13.5