ஏ.எம்.மாஹிர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 282 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-768-4.
பாடசாலை நிதி முகாமைத்துவத்திற்கான அறிமுகம், அரச பாடசாலை ஒன்றின் நிதி மூலங்கள், பாடசாலைகளின் வரவு-செலவு திட்ட முகாமைத்துவம், பாடசாலைகளில் அதிகாரக் கையளிப்பும் நிதிக் கட்டுப்பாடும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பாடசாலைப் பெறுகை முறைமை, பாடசாலைகளில் கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகள், பாடசாலை ஒன்றில் காசுகள், காசோலைகள் ஊடான கொடுப்பனவுகள், வங்கிக் கணக்கிணக்கக் கூற்றுகள், பாடசாலையொன்றில் வசதிகள் சேவைகள் கட்டணங்கள், தரமான கல்வி உள்ளீடுகள், பாடசாலை மாணவர் விடுதி முகாமைத்துவம், பாடசாலை உணவகம், பாடசாலையொன்றின் பழைய மாணவர் மாணவிகள் சங்கம், பாடசாலைகளால் மேற்கொள்ளப்படும் கல்விச் சுற்றுலா, பாடசாலையொன்றில் பொருட்கள் சுற்றாய்வுச் சபை, பாடசாலையில் ஏற்படும் இழப்புகளும் அதைப் பதிவழித்தலும், பாடசாலையினால் பேணப்படவேண்டிய புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள், பாடசாலை மட்ட கணக்காய்வும் உள்ளகக் கணக்காய்வும் ஆகிய 19 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக அதிபர்கள், ஆசிரியர்களின் கடமைப்பட்டியல், வலயக் கல்வி அலுவலகம் மற்றும் பாடசாலைகள் தொடர்பாக பேணப்படும் நிதி முகாமைத்துவம் தொடர்பான நியதிகளும் சுட்டிகளும், பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியிலான அளவுரீதியிலான கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருப மாற்றங்கள் ஆகிய மூன்று ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எம்.மாஹிர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணிப் பட்டத்தையுடம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவர். இது இவரது நான்காவது நூல்.