16251 அறிவியல்கதிர் 1985-1986.

தி.சப்தகரன், கா.சந்திரகுமாரி (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: விஞ்ஞான மன்றம், கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீதேவி அச்சகம், நல்லூர்).

58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

விஞ்ஞான அறிவு நூல்களை தமிழில் எழுதும் ஆர்வத்தை பாடசாலைப் பருவத்திலேயே வளர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய மாணவர்களால் இம்மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்விதழில் நோ உடலின் முன்னறிவிப்பு, இலத்திரனியல் பற்றிய ஒரு கண்ணோட்டம், சில வெப்ப வலய நோய்களும் தடுப்பு ஆராய்ச்சிகளும், நுண்ணுயிருலகம், விஞ்ஞான விற்பன்னர் சிலர், வால் வெள்ளி, வானிலை, நிற ஒளிக் கதிர்களின் தன்மைகள், இலங்கையின் பனம் தொழில் வளம், இப்படியும் நடக்கிறது, எண் கோலங்கள், சில உண்மைகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 281745).

ஏனைய பதிவுகள்