16253 இந்துவின் தமிழ்த்தீபம் 2001.

ஆ.கோகுலன், இ.கிருஷன், கு.வேணுகோபன் (ஆசிரியர் குழு). கொழும்பு 4: பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, மார்ச் 2001. (கொழும்பு: எஸ்.சற்குணராஜா, எஸ்.பிரின்ட்).

xii, 84 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வருடாந்தம் நடத்தும் ‘முத்தமிழ் விழா” வின்போது வெளியிடப்பட்டுள்ள 2001ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இது. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவர்களின் மாதாந்த சஞ்சிகையான ‘தமிழ்ச்சுடர்” ஆண்டுச் சிறப்பிதழாக இம்மலர் மாணவர்களின் தேர்ந்த ஆக்கங்களுடன் வெளிவந்துள்ளது. கவிதைப் பகுதியில் அறத்தால் வரும் இன்பம் (கு. மாலன், தரம் 11), அன்பு வழி (வரவேஸ்வரன் கேதீஸ்வரன்), கனவுகள் நனவாகுமா? (வாமதேவன் வசந்தன், ஆண்டு 12), முரண்பாடுகானும் மரபுகள் (விமலாதித்தன்), பொறுத்திடும் பூமித்தாயே உன் சீற்றத்தின் காரணம்? (செ.சுஜாதா) ஆகிய ஆககங்களும், சிறுகதைப் பகுதியில் இனி அவளின் நிலை? (ச.வசந்த்), (சிறைச்சாலை (சி.கேசவன், ஆண்டு 11) ஆகிய கதைகளும், கட்டுரைப் பகுதியில், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் (சி.ஜனார்த்தன், ஆண்டு 4), நான் விரும்பும் ஈழத்துப் பெரியார் விபுலானந்த அடிகள் (செ.மிருணாளன்), நான் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால்… (ஞா.சரத் சங்கீத், ஆண்டு 5), நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (எஸ்.ரீ.இ.பாலமுரளி), இலக்கிய மரபில் தமிழர் வாழ்வு (ப.பிரியா), கூடி வாழ் (ஜெ.டினேஸ், ஆண்டு 7), இருமுது குரவர்கள் (பா.சஞ்சீவன், ஆண்டு 7), அறம் போதிக்கும் குறள் (க.ஹரன்பிரசாந், ஆண்டு 11), தனிமனித வாழ்வில் தாய்மொழி பெறும் இடம் (பி.ஆரஞ்சா), பண்புப் பரிவர்த்தனை (இ.கிருஷன், ஆண்டு 12), இயற்கை இன்பம் (ரவிராஜ் நிர்மலன், ஆண்டு 8), காலம் பொன் போன்றது (த.ராகுலன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. வெளிமாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டி முடிவுகள் இறுதியல் தரப்பட்டுள்ளன. 

ஏனைய பதிவுகள்

Da Vinci Expensive diamonds

Posts Diamond Harbors Game Real money Ports Diamond 7 Casino Remark Twice Da Vinci Expensive diamonds: The basic principles These types of IGT ports along