16257 இராம ஒளி: இதழ் 7: 2022.

பிருந்தா சத்தியசீலன் (இதழாசிரியர்). சுன்னாகம்: நூலக அபிவிருத்திக் குழு, யா/இராமநாதன் கல்லூரி, மருதனார்மடம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில்).

xvi, 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

2022ம் ஆண்டின் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்லூரியின் நூலக அபிவிருத்திக் குழுவினர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோரின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட ஆண்டிதழ். இளம் சமுதாயத்தின் துடிப்பான எண்ணங்கள், புதிய சிந்தனைகள், பரந்துபட்ட அறிவாற்றல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இணையவழிக் கல்வி, சூழல் பாதுகாப்பு, கழிவுப்பொருள் முகாமைத்துவம், நேர முகாமைத்துவம் போன்றவை தொடர்பான நவீன கருத்துக்கள் இம்மலரின் ஊடாக மாணவர்களினூடாகவும் ஆசிரியர்களினூடாகவும் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன. பாடசாலையின் மாணவர்கள் ஆசிரியர்கள் மாத்திரமன்றி, சமூக நலன்விரும்பிகளினதும் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12813 – முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு (சிறுகதைகள்).

அகரமுதல்வன். சென்னை 600078: டிஸ்கவரி புக் பேலஸ், பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுசுக்கு அருகில், கே.கே. நகர் மேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 111 பக்கம், விலை: இந்திய ரூபா