திருநாவுக்கரசு கமலநாதன். யாழ்ப்பாணம்: நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக் கூடல், 331, கோவில் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜீலை 2022. (யாழ்ப்பாணம்: சோலோ பிரின்டர்ஸ், 520 யு, கஸ்தூரியார் வீதி).
xxviii, 240 பக்கம், தகடுகள், விலை: ரூபா 1500., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-43376-5-6.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் 22ஆவது அகவைச் சுவடாக 02.05.2022 அன்று வெளியிடப்பட்ட நூல். இக்கல்லூரியின் கதையை சுவாரஸ்யமாக பத்து இயல்களில் கூறி முடித்துள்ளார். கல்லூரி வாழ்க்கை வேறு, தன் சொந்த வாழ்க்கை வேறு என்றில்லாமல், கல்லூரியின் கதையின் ஊடாக எம்மால் தமிழாசான் திருநாவுக்கரசு கமலநாதனின் வாழ்வும் பணியும் பற்றியும் இந்நூல் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது. கால்கோள், பணி ஏற்றல், பதவி நிகழ்த்தல், பணி இயக்கல், பணிமனை புகல், ஈட்டலும் உறுத்தலும், இடப்பெறுகை ஈட்டம், சிந்தனை சொல் செயல், நிறைகொளல், எழுகோலச் சிற்பிகள் என பத்து இயல்களும் விரிவாக எழுதப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நிமிர்ந்து நிற்கும் தேசிய கல்வியியற் கல்லூரியைத் தோற்றம் பெறவைக்க இவர் எதிர்கொண்ட இன்னல்கள் இடர்கள் அளவிலாதவை. சிந்தனை-சொல்-செயல் ஒரே இலக்கில் பயணித்தால் கொண்ட இலக்கை அடைய முடியும் என்பதை இவரது மகத்தான வெற்றி எமக்குக் கற்றுத்தந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70036).