இ.குமாரவேல் (பொறுப்பாசிரியர்), க.சியாமளா, சி.சுகன்யா (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: வர்த்தக மாணவர் மன்றம், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 6: சு.கிருஷ்ணமூர்த்தி, கிரிப்ஸ், வெள்ளவத்தை).
(12), 88 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18சமீ.
சுருங்கிவரும் உலக உருண்டையில் உலகமனைத்தும் ஒரு பொதுச்சந்தை என உலகமயமாக்கலை நோக்கி நடைபோடும் வணிகத்துறையின் சிறப்பினை பாடசாலை மாணவர் மட்டத்தில் விரிவுபடுத்தும் அல்லது தெளிவுபடுத்தும் நோக்கில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வணிக மாணவர் மன்றத்தினர் வெளியிட்டுள்ள ஆண்டு மலர் இதுவாகும். பாடத்திட்டத்துடன் தொடர்பான அத்துறை சார்ந்த கட்டுரைகளும் ஆசிரிய/மாணவர்களின் படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன.