இ.இராஜேஸ்கண்ணன். உடுப்பிட்டி: மீளுகை 2, இமையாணன், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).
xii, 124 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14 சமீ., ISBN: 978-624-98471-2-5.
ஆசிரியர் சமூகவியலைக் கல்விசார் துறையாகக் கொண்டவர் என்பதாலும். கதை சொல்வதில் ஆர்வமுடையவர் என்பதாலும், கதைகளின் வழியாகக் கிராமிய மக்களது சமூகவியலை பதிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கிராமத்து மனிதர்களை அவரவர்க்கான வாழ்வியல் பின்னணிகளோடு தரிசிப்பதில் மிகுந்த திருப்தி உண்டாகின்றது. கிராமிய மக்களை அவர்களது தொழில்கள், கலைகள், சமயாசாரங்கள், கைவினைகள், விளையாட்டுக்கள், புழங்குபொருள்கள், வைத்திய முறைகள், தொழினுட்பங்கள், தொழில்சார் உறவுகள், சேமிப்பு மற்றும் பொருளீட்டல் வழிமுறைகள் சமூக அதிகாரங்கள் என்பவற்றுடன் சேர்த்து வெளிக்கொண்டுவருவதற்கு கதைகளை இங்க ஒரு ஊடகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சஞ்சீவி வார இதழில் “இராகன்” என்ற புனைபெயரில் ஆசிரியர் ‘கிராமத்து மனிதர்கள்” என்ற தலைப்பில் எழுதிய 20 கதைகளையும், தீம்புனல் வார இதழில் ‘ஊருக்கை ஒரு கதை” என்ற தலைப்பில் வெளியான 10 கதைகளையும், இணைத்து 30 கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.