பொன் பாலசுந்தரம். லண்டன் E7 8PQ : சுடரொளி வெளியீட்டுக் கழகம், 15, Rutland Road, 1வது பதிப்பு, 2018. (சென்னை 600 005 : ஸ்ரீ ராகவேந்திரா லேசர் பிரின்டர்ஸ், 15, தானப்ப தெரு, திருவல்லிக்கேணி).
336 பக்கம், சித்திரங்கள், விலை: ஸ்டேர்லின் பவுண் 15.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-1-998673-1-7.
லண்டன் திருமணங்களில் இன்று இடம்பெற்றுவரும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தனது அனுபவங்களையும் அறிவையும் சமூகப்பொறுப்பையும் கலந்து இதிலுள்ள 53 கட்டுரைகளையும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இனவம்ச விருத்திக்கு திருமணம் ஒரு திறவுகோல், புலம்பெயர் நாடுகளிலும் நமது இனப்பெருக்கம் அவசியம், வந்தாரை வாழவைத்தவர்கள் நொந்தாரை.., இனம் தாவும் தமிழ் இளைஞர்கள்-யுவதிகள், உறவுகள் கலங்க மாற்றான் வீட்டில் வாழ்க்கை, ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள்-பின்னர்?, அதிர்ச்சி தந்த அழைப்புக்கள் ஐந்துக்கு மூன்று இனம் மாறிகள், குஜராத்திப் பெண்களுக்கு தமிழ் இளைஞர் மீது மோகம், மதம் ஒன்றுபடுத்தும் குஜராத்தித் திருமணங்கள், சுகசீவிய வாய்ப்பும் இலண்டன் வாழ்க்கையும், பணக் கைதிகளாகும் பெற்றோர்கள், பெற்றோர்களுக்கு வாய்ப்பூட்டு-வீட்டுக்குள் விரும்பாத பெண், தமிழர் பாரம்பரியம் பேணும் இலண்டன் திருமணங்கள், அந்தநாள் ஞாபகங்களும் இன்றைய திருமணங்களும், ஊர்வலம் வரும் வரையில் ஊர் விழித்திருக்கும், பாரம்பரிய பலகாரச் சூட்டில் இலண்டன் குடும்பங்கள், வரவேற்கிறார் பிள்ளையார்-வீடுகளுக்கும் எழுந்தருளல், ஹோட்டல்களில் ஆடம்பரம் குடும்பங்கள் போட்டி என இன்னோரன்ன சுவையான தலைப்புகளில் இக்கட்டுரைகள் அமைகின்றன.