தங்கராசா சிவபாலு. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: பி.வி.ஆர.; ஆஃப்செட்).
xvi, 100 பக்கம், விலை: இந்திய ரூபா 50.00, அளவு: 19×13.5 சமீ.
திருமணம், திருமண வகைகள், திருமணத்திற்கு முன் இடம்பெற வேண்டியவை, பொருத்தம் பார்த்தல், கலியாணம் முற்றாக்குதல் (நிச்சயதார்த்தம்), திருமண நாள் பார்த்தல் அல்லது நாள் வைத்தல், தாலிக்குப் பொன்னுருக்குதல், கன்னிக்கால் நடுதல், மாப்பிள்ளை அழைப்பு, பவித்திரம் அணிதல், மாலை மாற்றுதல், ஏழடி நடத்தல், அம்மி மிதித்தல், குற்றம் நீக்குதல், அருந்ததி பார்த்தல், மோதிரம் போட்டு எடுத்தல், அரசாணி, வாழ்த்துதல் – ஆராத்தி எடுத்தல், தமிழர் திருமண முறை, புதுமணத் தம்பதிகளை வாழ்த்துதல் ஆகிய 20 தலைப்புகளின்கீழ் வைதீக மற்றும் தமிழர் திருமண முறைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரான தங்கராசா சிவபாலு பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார்.