16278 கிராமிய நடனப் பாடல்கள்.

வை.கணேசபிள்ளை. யாழ்ப்பாணம் : இணுவில் பொது நூலக இலக்கியத்துறை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2021. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில்).

xvi, 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

நூலாசிரியர் பண்டிதை கலாபூஷணம் திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை யாழ் மாவட்டத்தின் பாடசாலைத் தமிழ்த் திறன் கலைப்போட்டிகளுக்கு வேண்டிய நாட்டிய நாடகங்களை ஏற்கெனவே தாராளமாக எழுதிக் கொடுத்துள்ளார். இவற்றின் தொகுதியாக ஏற்கெனவே நாட்டிய நாடகங்கள் என்ற நூல் 2012இல் வெளிவந்திருக்கின்றது. வாழ்த்துப் பாக்கள், ஊஞ்சற் பாடல்கள், வரவேற்புப் பாடல்கள் என இவரது படைப்பாக்கங்கள் பல்வகைப்பட்டன. அவற்றில் இருபது கிராமிய நடனப் பாடல்களைத் தேர்வு செய்து இத்தொகுதியில் வழங்கியிருக்கிறார். இணுவில் பொது நூலகம்-சனசமூக நிலையத்தின் இலக்கியத் துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றும் பண்டிதை கலாபூஷணம் திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை, இலக்கியத்துறையின் வாயிலாகப் பல நூல்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். இவரால் எழுதி வெளியிடப்பட்ட ’கிராமிய நடனப் பாடல்கள்” என்ற இந்நூலில் விநாயகர் கும்மிப் பாடல், மயில் நடனம், நோய் பிணி தீருமம்மா (கும்மி), வேப்பிலைச் சுந்தரியே (வேப்பிலை நடனம்), செம்பு நடனம், சுளகு நடனம், சங்கத் தமிழ் பாடி (கும்மிப் பாடல்), பழந்தமிழர் பண்பு பாடி (பந்து நடனம்), மங்கையர் பந்தடித்தனரே (பந்து நடனம்), ஈழவள நாடு பாடி ஆடுவோம் (கோலாட்டம்), கோல்கள் ஆடுவோம் (கோலாட்டம்), தூரத்து இறக்குமதி (அரிவு வெட்டு நடனம்), பசுமைப் புரட்சி (அரிவு வெட்டு நடனம்), அரிவு வெட்டு நடனம், தைத்திருநாள், வாள் நடனம், தேயிலைக் கொழுந்து நடனம், ஏலேலோ ஐலஸா (கப்பல் பாட்டு), குறவர் வாழ்வு, குறவஞ்சி நடனம், மங்கல வாழ்வளிக்கும் பனைமரம், நூலகமென்பது பூஞ்சோலை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 22 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

On line Roulette Roulette Online game

Blogs Casino Gofish mobile – DISTRAINT: Pouch Pixel Horror Tips Enjoy Roulette On the internet: Legislation and Distinctions Bistro Gambling enterprise Really does free roulette