புலவர் மரிசால் மிறால் (குப்பையப் புலவர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: அன்ரா பிரின்டர்ஸ், 379 கஸ்தூரியார் வீதி).
xviii, 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-5911-00-4.
முன்னர் 1994இல் நானாட்டான் பிரதேச கலாசாரப் பேரவை வெளியீடாக வெளிவந்த சந்தொம்மையர் வாசாப்பு இப்பொழுது மீள்பதிப்பாக வெளிவந்துள்ளது. குப்பையப் புலவர் என்று அறியப்பெற்ற மரிசால் மிரால் புலவரால் இது முன்னர் எழுதப்பட்டது. மன்னார், மாதோட்ட மக்களினால் சுப நிகழ்வுகளில் பெரும்பாலும் பாடப்படுவது இவ்வாசாப்பின் பாடல்களேயாகும். இக்கூத்தின் மேல் மக்கள் கொண்ட அபிமானத்தின் வெளிப்பாடாகவே இது நோக்கப்படுகின்றது. இப்பதிப்பில் இவ்வாசாப்புப் பாடல்கள் சீர்வரிசை முறையுடன் தென்பாங்கு மெட்டிற்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மறுபதிப்பிற்கான மூல ஏடாக பாலைக்குழி, நானாட்டான் என்ற முகவரியைச் சேர்ந்த அமரர் அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஏட்டைப் பயன்படுத்தியுள்ளனர்.