16280 தென் யாழ்ப்பாணம் : இம்மண்ணில் ஆடப்பெற்ற கூத்துக்களும் செயற்பட்ட கலைஞர்களும்-ஆய்வு நூல்.

சிவநாமம் சிவதாசன். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2022. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). 

xi, 111 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ., ISBN: 978-624-5911-17-2.

தென் யாழ்ப்பாணம், நாட்டுக் கூத்துக்களின் வருகை, கதைவழிக் கூத்து என அழைக்கப்பட்ட சிந்துநடைக் கூத்து, இசை நாடக வருகை, பபூன் எனப்படும் நகைச்சுவை வடிவம், ஒப்பனைக் கலை வடிவமும் பின்னணி இசைக் கலையும், அரியாலைக் கிராமத்தில் ஆடப்பெற்ற கூத்துக்களும் கலைஞர்களும், கொழும்புத்துறைக் கிராமத்தில் நாட்டுக் கூத்துக்களும் கலைஞர்களும், பாஷையூர்க் கிராமத்தில் நாட்டுக்கூத்தும் இசை நாடகம் ஆடிய கலைஞர்களும், ஈச்சமோட்டை, கொய்யாத்தோட்டம், சுண்டுக்குளி கிராமங்களில் கூத்துக் கலை வளர்ச்சியும் கலைஞர்களும், குருநகர் பிரிவில் நாட்டுக் கூத்தும் கலைஞர்களும், நாவாந்துறைக் கிரமத்தில் நாட்டுக்கூத்தின் வளர்ச்சியும் கலைஞர்களின் பங்களிப்பும் ஆகிய பன்னிரண்டு இயல்களில்; இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரியாலைக் கிராமத்தில் தன் தனித்துவமான கலை ஆளுமைத் திறத்தின் வழியாகப் பிரகாசித்துக் கொண்டிருப்பவர் கலாபூஷணம், கலைக்குரிசில், தேச அபிமானி ஆகிய பட்டங்களைப் பெற்ற சிவநாமம் சிவதாசன். சிறு வயது முதல் நாடக இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். 1967 முதல் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் தன் படைப்பாக்கங்களை வெளியிட்டு வருபவர்.

ஏனைய பதிவுகள்

100 Kr Gratis Uten Bidrag

Content Hvordan Blir Indre Noe Fra Revolution Casinos Vip Casinosider Du Kan Bite på Har Gyldig Spillelisens Koi Casino Casino Bonuser Uten Bidrag Boost Casino