பீ.ரீ.அஸீஸ். கிண்ணியா 07: பாத்திமா றுஸ்தா பதிப்பகம், பெரியாற்று முனை, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
viii, 9-48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 240., அளவு: 24×17 சமீ., ISBN: 978-955-0715-22-0.
தாய்-சேய் இருவருக்குமான உறவு, பாசப் பிணைப்பு, என்பவற்றை இந்நூலிலுள்ள அனைத்துப் பாடல்களும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இங்கு கையாளப்பட்டிருக்கின்ற உவமான உவமேயங்கள் மனதில் பல்வேறு இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தி குழந்தைகளைக் குதூகலத்தில் ஆழ்த்துவதிலும் வெற்றிகண்டுள்ளது. மாட்டு வண்டி மணியோசை, பூங்கொத்து, அம்மா அம்மா என்று, உன் நினைவே மகிழ்வெனக்கு, சின்னவனே சின்னவனே, காலைப் பொழுதின்பம், கண்மணியே நீ உறங்கு, பூ மழைகள் திரளாக, குரல் கெட்டு புன்னகைக்கும், யாருக்குத் தெரியும், ஊர் உறங்கும் நேரத்திலும், காட்டு மல்லி, துன்பங்கள் விலகிடும், பஞ்சு மெத்தை தேடும், பிஞ்சு முகம் பார்க்க வந்தேன், மூங்கில் கம்பு வெட்டி, தேனமுது, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, முத்துப் பல்லழகா, கண்ணே கனியமுதே, தலையாட்டி மகிழ்வாயா? ஆகிய தலைப்பில் எழுதப்பட்ட 21 தாலாட்டுப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.