16290 ப்ரயோக சம்ஸ்கிருதம் அல்லது பேச்சு சம்ஸ்கிருதம்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீ நகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சுன்னாகம்: கஜானந்த பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).

118 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 26×18.5 சமீ ISBN: 978-955-4078-07-9.

வடமொழி அல்லது சம்ஸ்கிருதத்தில் கிரந்தம், தேவநாகரி (நாகரம்) என இரு எழுத்துருக்கள் (லிபிகள்) பயன்பாட்டில் உண்டு. நாகர லிபியிலேயே அதிகமாக சம்ஸ்கிருத இலக்கண இலக்கியங்களைக் கற்று வருகிறார்கள். சிவாசாரியார்கள் பலர் கிரந்த லிபி மட்டுமே தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்நூல் ஒரே சமயத்தில் கிரந்தம், நாகரம் ஆகிய இரு லிபிகளிலுமே வெளியிடப்பட்டுள்ளது. ‘ராஜேந்திரராம் நிவாஸ் பதிவு” என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட சம்ஸ்கிருத பாடத்தைப் பெரிதும் பின்பற்றி  சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சில ஒலி-ஒளி வடிவங்களைத் துணைக்கொண்டும் இந்நூலை ஆசிரியர் தயார் செய்திருக்கிறார். வித்யாசாகர் கே.எல்.வி. சாஸ்திரி அவர்களின் வெளியீடுகள் முதலிய பழைய சம்ஸ்கிருத பாடநூல்களையும் ஆதாரமாகக் கொண்டு பழமையும் புதுமையும் இணைய இந்நூல் உருவாகியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70026).

ஏனைய பதிவுகள்

What is a wild Goose Chase?

Articles Templates inside the A crazy Sheep Pursue a wild goose pursue 150 opportunity the new nuts chase Better $10 Deposit Casinos regarding the NZ