16294 தமிழ்-ஓர் அறிமுகம் (Tamil-An Introduction).

ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கனடா: ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, 1வது பதிப்பு, 2018. (கனடா: அச்சக விபரம் தரப்படவில்லை).

56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-0-9738750-3-4.

இலங்கையில் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்நூலாசிரியர் ஓர் எழுத்தாளருமாவார். இவர் தற்போது டொறன்ரோ கல்விச் சபையின் தமிழ்மொழி ஆசிரியராகவும், மொழி மதிப்பீட்டாளராகவும், பாடவிதான அபிவிருத்திக் குழுவின் ஓர் அங்கத்தவராகவும் சேவைபுரிகின்றார். ஸ்ரீரஞ்சனியின் தமிழ்-ஓர் அறிமுகம் என்னும் இந்நூல் தமிழ் மொழியினையும் இலக்கியத்தையும் கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு நல்ல எளிமையானதும் சுருக்கமானதுமான ஓர் அறிமுகத்தினை வழங்குகின்றது. செம்மொழியான தமிழ்மொழி பற்றிப் புலம்பெயர் நாடுகளில் வளரும் தமிழ்ச் சிறார்களுக்கு தனது தாய்மொழியின் பெருமைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினை இந்நூல் வழங்குகின்றது.

ஏனைய பதிவுகள்

12431 – யாழ்நாதம்: இதழ் 6-2000.

சிவகாமி அம்பலவாணர் (இதழாசிரியர்). கொழும்பு:பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளை,1வது பதிப்பு, 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி) 68 பக்கம், புகைப்படங்கள், விலை: