ஆ.சதாசிவம். தஞ்சாவூர் 613005: தமிழ்ப் பல்கலைக் கழகம், 1வத பதிப்பு, ஓகஸ்ட் 2006. (தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகம்).
(12), 224 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 81-7090-372-6.
உலக மொழிகளுள் தொன்மைமிக்க மொழி தமிழ் மொழியே என்பதைப் பல ஆராய்ச்சியாளர்களும் நிறுவி வருகின்றனர். தமிழ்ச் சொற்களின் தோற்றம் பற்றிய ஆய்வுகள் இம்மொழியின் தனித்தன்மையை எடுத்துரைக்கக் காண்கின்றோம். தமிழ்ச் சொற்களின் பிறப்பு நெறி என்னும் தலைப்பில் வெளிவரும் இந்நூல் இவ்வகையில் உருவாக்கப்பட்ட ஓர் அரிய படைப்பாகும். மனிதன் தமிழிற் பேச ஆரம்பித்த காலத்திலிருந்து சொற்களின் பிறப்பு, அவற்றின் ஒலி வடிவம், பொருள் என்பன பற்றி இந்நூல் விளக்குகின்றது. முன்னுரை, தமிழில் தனிநிலை அடிச்சொற்கள், தமிழில் இணைநிலை அடிச்சொற்கள், தமிழில் குறைநிலை அடிச்சொற்கள், தமிழில் உயிர் முதற் சொற்களின் பிறப்பு நெறி, தொல்காப்பியம் காட்டும் பழந்தமிழ்ச் சொற்பிறப்பு நெறி, முடிவுரை ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.