16297 மொழியியலும் தமிழ் மொழி வரலாறும்.

ஆ.சதாசிவம் (மூலம்), இளையதம்பி பாலசுந்தரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: திருஞானேஸ்வரி சதாசிவம், இல. 11, சின்சபா வீதி, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xxv, 262 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ., ISBN: 978-624-97668-1-5.

கலாநிதி ஆ.சதாசிவம் அவர்கள் மொழியியல்/ தமிழ்மொழி வரலாறு பற்றி எழுதியுள்ள முக்கியமான நூல். மொழியியல் (இறைவனாலே தோற்றுவிக்கப்பட்டது மொழி, மனித மூளையின் தொழிற்பாட்டறிகுறி மொழி, கருத்தை உணர்த்த உதவும் கருவி மொழி, நிரல்பட்ட சொற்றொடரறிகுறி மொழி, வாழும் உயிர்ப்பொருள் மொழி, மொழி என்பது ஓர் எந்திரம், மொழி என்பது ஒரு சமூகப் பழக்கம், இலக்கியத்தின் கருவி மொழி, மொழி என்பது ஒரு கலை, மொழி என்பது சமுதாயத்து மரபுகளின் ஒழுங்குமுறை, மொழியியல் விளக்கம்), மொழி வரலாறு (வரலாற்று மூலங்கள், மொழி விளக்கவியல், புத்தாக்கவியல், மொழியிலே நிகழும் மாற்றங்கள், பிறமொழிக் கலப்பு, மொழியின் வளர்வும் தேய்வும்), குறிப்பு மொழிக்காலம் (குறிப்பு மொழியினது தொடக்கம், குறிப்பு மொழியின் வகை, குறிப்பு மொழியும் உணர்ச்சியும், குறிப்பு மொழியும் பேச்சு மொழியும்), ஒலிக்குறிப்பு மொழிக்காலம் (ஒலிக்குறிப்பு, ஒலிக்குறிப்பின் வகை, ஒலிக்குறிப்பும் மொழியினது தோற்றமும், சங்க நூல்களில் ஒலிக்குறிப்பு ழுழெஅயவழிழநயை), அசை மொழிக் காலத் தமிழ்: கி.மு.3000 (அசைமொழிக் காலம், அசைமொழிக் காலத் தமிழ்நாடு, அசைமொழியும் குழந்தை மொழியும், அசைமொழிச் சொற்கள், அசைமொழிச் சொற்களின் பண்பு, அசைச் சொல் உயிரொலிகள் நெட்டுயிரின் பான்மையன, அசைச் சொற்களின் பொருள்வளம்), உயிரின மெய்களின் தோற்றமும் தொழிற்சொற் பிறப்பும்: கி.மு.2500 (உயிரின மெய்களின் தோற்றம், தொழிற்சொற் பிறப்பு), மூக்கின மெய்களின் தோற்றமும் பெயர்ச்சொற் பிறப்பும்: கி.மு.2000 (மூக்கின மெய்களின் தோற்றம், பெயர் சொற்பிறப்பு), மூலவுயிர்க் குறுக்கமும் வினைச்சொற் பிறப்பும்: கி.மு.2000-கி.மு.1500 (மூலவுயிர்க் குறுக்கம், வினைச்சொற் பிறப்பு, குறிப்பும் வினையும்), ஒலியழுத்தமும் ஒலிப்பிளவும் (றகர மெய்யொலியின் தோற்றம்) ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூலை அவர் விரிவாக எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Tropezia Château Recul

Ravi Publicités Spéciales Détail Pour Salle de jeu Do You Need More Prime Chiffres Cognition Euro Château Salle de jeu? Des blogs Pareillement Castel Of

14417 நடைமுறைத் தமிழ் வழிகாட்டி: அகரமுதலி.

தமிழ் வளர்ச்சிக் கழகம். இலங்கை: தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, மே 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 59 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு: 20×14.5