16300 தமிழிலக்கணச் சாரம் : பரீட்சை நோக்கிய இலக்கு, தரம்10-11 (தமிழ்மொழியும் இலக்கியமும் பகுதி 1,2, செயல்நூல்).

என்.எஸ்.நஸ்ரா. கொழும்பு 9: ரீட் மோர் பப்ளிக்கேஷன்ஸ், 77, ஸ்ரீ வஜிரஞான மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 104 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-7060-33-0.

தமிழ் மொழியும் இலக்கியமும் பகுதி 1,2 பாடத்திட்டத்திற்குரிய இச் செயல் நூலில், பரீட்சை எதிர்பார்ப்பு சுருக்க வினாக்கள், மாதிரி பல்தேர்வு வினாக்கள், மீட்டல் பரீட்சை சுருக்க வினாக்களின் தொகுப்பு, மீட்டல் பரீட்சை பல்தேர்வு வினாக்களின் தொகுப்பு, சுருக்க வினா-விடை ஆகிய ஐந்து இயல்களில் பரீட்சைக்குரிய வினாக்களும், நூலின் இறுதியில் அவற்றுக்கான விடைகளும் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் திருமதி என்.எஸ்.நஸ்ரா, புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பிரிவின் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியையாவார்.

ஏனைய பதிவுகள்

16617 அம்ருதாவின் புதிர் வட்டங்கள்.

சித்தாந்தன் (இயற்பெயர்: சபாபதி உதயணன்). யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, ஆடியபாதம் வீதி, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்கழி 2021. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி). x, 149 பக்கம்,