16306 பாலபாடம் : மூன்றாம் புத்தகம்.

பொன்னம்பலபிள்ளை.கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல. 36, நந்தன கார்டின்ஸ், 1வது பதிப்பு 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

129 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-659-536-9.

பாலபாடம் மூன்றாம் புத்தகத்தின் 11ஆம் பதிப்பினை இங்கு மீள்பதிப்புச் செய்துள்ளனர். மூலநூல் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரவர்கள் சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகராயிருந்த பொன்னம்பலபிள்ளையால் செய்து, சென்னபட்டணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் 1892இல் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. நாவலர் நற்பணி மன்றத்தினால் 2016இல் மேற்கொண்ட மீள்பதிப்பு முயற்சியின் பயனாக மீளவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் நன்மாணாக்கன், நித்திரை, நித்திய கருமம், பெரியோரை வழிபடல், சற்புத்திரர்களே ஆபரணம், சகோதர சகோதரிகள், துர்வார்த்தை, உயிர்களுக்கு இதஞ்செய்தல், பெற்றாரைப் பேணல், கடவுளுதவி, யுத்தியுள்ள தீர்ப்பு, கல்வி, செல்வம், கேள்வி, முயற்சி, பெண் கல்வி, காலம், உண்மையின் பயன், பரிகாசம், இந்தியா, நம்மை ஆளும் அரசர், மிருகம், புறங்கூறல், வித்தியாசாலை, புத்தகம், வேளாண்மை, நாணகம், சிநேகம், ஈகை, இலங்கை, பேராசை பெருந்துயர், வீடு, தாவரம், சிங்கம், பொய்வேடம், தென்னை, சரீர சௌக்கியம், யாக்கை நிலையாமை, சற்புத்திரர், ஒட்டகம், செய்ந்நன்றி கொன்றவர் கெடுவர், கல்வியின் பயன், காகிதம், மழை, குதிரை, உலோகங்கள் ஆகிய 46 பாடங்கள் முதலாம் பிரிவிலும், மாணிக்கவாசக சுவாமிகள் பற்றிய நீண்ட கட்டுரையொன்று இரண்டாம் பிரிவிலும் நீதி வெண்பா என்ற நீதிநூலின் மூலமும் உரையும் மூன்றாம் பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Galet Gauloise

Satisfait Jackpot city Casino Connexion | Comment Percevoir Un Salle de jeu Pourboire Sans avoir í  Archive 2024 ? Pas loin Abyssal De ma vie