16309 தளத் திரிகோண கணித உயர்நூல்.

E.W.ஹொப்சன். கொழும்பு 5: அரசாங்க பாஷைப் பகுதி, அரச கரும மொழித் திணைக்களம், வெளியீட்டுப் பிரிவு, 5 பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, 1966. (இலங்கை: அரசாங்க அச்சகம்).

xviii, 469 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

நு.று.ஹொப்சன் எழுதிய பிரித்தானியா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடான ‘A Treatise on Plane and Advanced Trigonometry’ என்ற நூலின் திருத்திய பதிப்பின் மொழிபெயர்ப்பு  இதுவாகும். பல்கலைக்கழக முதலாண்டில் தூய கணிதம் படிக்கும் மாணவர்களுடைய திரிகோண கணிதம் பற்றிய தேவைகளை இது பூர்த்தி செய்கின்றது. தள, உயர் திரிகோண கணிதங்களில் வரும் கொள்கைகள், குறிப்பாக ‘வட்டச் சார்பு” பற்றிய கொள்கை, நன்கு எடுத்தாளப்பட்டுள்ளமையால், இந்நூல் பட்டக் கல்வி பயிலும் மாணவர்க்கு மிக உயர்ந்தது. கோணப் பருமனின் அளவீடு, கோடுகளின் அளவீடு, எறியங்கள், வட்டச் சார்புகள், இரண்டு அல்லது இரண்டின் மேற்பட்ட கோணங்களின் வட்டச் சார்புகள், கீழ் மடங்குக் கோணங்களின் வட்டச் சார்புகள், வேறு வேறு தேற்றங்கள், மடங்குக் கோணச் சார்புகளின் விரி, வட்டச் சார்புகளுக்கும் கோண வட்ட அளவைகளுக்கும் உள்ள தொடர்புகள், திரிகோண கணித அட்டவணைகள், ஒரு முக்கோணியின் பக்கங்களுக்கும் கோணங்களுக்கும் உள்ள தொடர்புகள், முக்கோணிகளின் தீர்வுகள், முக்கோண நாற்பக்கல்களின் உடைமைகள், சிக்கலெண்கள், முடிவில்லாத் தொடர்க் கொள்கை, அடுக்குக் குறிச் சார்பு மடக்கைகள், அதிபரவளைவுச் சார்புகள், முடிவில் பெருக்கங்கள், தொடர் பின்னங்கள் ஆகிய பதினெட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70647).

ஏனைய பதிவுகள்

Playojo Gambling enterprise

Blogs Try Free Ports The same as A real income Ports? Offers and Incentives Bonuses And you will Jackpots And therefore Harbors Incentives Manage Offer