16312 இலங்கையின் கிழக்குப் பிரதேச காலநிலை நீர்ச்சமநிலை.

க.இராஜேந்திரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 197 பக்கம், அட்டவணைகள்;, வரைபடங்கள், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-737-0.

இந்நூல் பல்கலைக்கழகங்களில் புவியியல் பாடத்தினை பொதுக் கலை, சிறப்புக்கலை பட்டப்படிப்பகளில் ஒரு பாடமாக தமிழ் மொழிமூலம் கற்கின்ற மாணவர்களும் இத்துறை சார்ந்த ஆய்வாளர்களும் பயன்பெறும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அத்தியாயம் ஒன்று ஆய்வு அறிமுகமாகும். இதில் ஆய்வுப் பின்னணி பற்றியும் நீர்ச்சமநிலை ஆய்வுகள் தொடர்பாகவும் முறையியல் பற்றியும் நீர்வளம் தொடர்பாகவும் விளக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் இரண்டு நீர்ச்சமநிலைக் கணிப்பீட்டு முறைகள் தொடர்பாக விளக்குகின்றது. இதில் பல்வேறு நீர்ச்சமநிலைக் கணிப்பீட்டு முறைகள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளதுடன் கணக்குப் பதிவீட்டு நுட்பமுறையில் உள்ள கூறுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாயம் மூன்று காலநிலை நீர்ச்சமநிலை கணிப்பீட்டு முடிபுகளை விளக்குகின்றது. இங்கு நீர்ச்சமநிலை முடிபுகள் ஆண்டு மற்றும் பருவகால அடிப்படையிலும், இடம் சார்பு ரீதியிலும் விளக்கப்பட்டுள்ளது. அத்தியாயத்தின் இறுதிப்பகுதியில் நிர்ச்சமநிலை வகைகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அத்தியாயம் நான்கு நீர்ச்சமநிலை முடிபுகளின் அடிப்படையிலான காலநிலைப் பாகுபாட்டினை எடுத்து விளக்குகின்றது. கிழக்குப் பிரதேசத்துக்கான காலநிலை பாகுபாடு தோன்த்வைற்றின் (Thornthwaite) இரண்டாவது காலநிலைப் பாகுபாட்டு முறைமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி இங்கு ஐந்து பிரதான காலநிலை வகைகளும் ஒன்பது காலநிலைப் பிரதேசங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. கலாநிதி க.இராஜேந்திரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்று அதே பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை விரிவரையாளராகப் பணியாற்றியவர். தனது முதுமெய்யியல்மாணிப் பட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் கலாநிதிப் பட்டத்தினை புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். 2008முதல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Cent Slots On line

Content Perfect for Immediate Cashbacks | stinkin rich online slot Incentive Qualifying Online game Just what Online slots Shell out Real cash? At the same